என்.சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

By செய்திப்பிரிவு

மூத்த இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா இன்று (ஜூலை 15) தன் 100-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் சங்கரய்யா. இவருடைய 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்களும் கடந்த சில தினங்களாகவே வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.பி., டி.கே.ரங்கராஜன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அதேபோன்று, முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் பொன்முடி, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக சார்பாக வன்னி அரசு ஆகியோரும் நேரில் சங்கரய்யாவை வாழ்த்தினர். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், சங்கரய்யாவுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்