கடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இளைஞர்களை உதாசீனப்படுத்தியதால் தோல்வி ஏற்பட்டது: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

By செய்திப்பிரிவு

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்அதிமுக நிர்வாகிகள் இளைஞர் களை உதாசீனப்படுத்தியதால் நாம் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டோம் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஒன்றி யங்களில் அதிமுக செயல் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நாட்றாம்பள்ளி ஒன்றியம், ஆத்தூர் குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியச்செயலாளர் சாம்ராஜ் தலைமை வகித்தார். வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, ‘‘நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட நான் 30 முதல் 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெறு வேன் என தேர்தலுக்கு முன்பு கணிக்கப்பட்டது.

ஒரு சில பகுதிகளில் இரட்டை இலைக்கு சாதகமாக வாக்குகள் பதிவானாலும், கிராமப்புறங்களில் அதிமுகவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. அதிமுக நிர்வாகிகள் இளைஞர்களை உதாசீனப் படுத்தியதால் கடந்த தேர்தலில் நாம் தோல்வியை சந்தித்துள்ளோம்.

ஜோலார்பேட்டை தொகுதியில் நமக்கு கிடைக்க வேண்டிய 13 ஆயிரம் வாக்கு நாம் தமிழர்கட்சிக்கு சென்றுள்ளது. இதற்கு அதிமுக கிளை நிர்வாகிகள், ஒன்றியநிர்வாகிகளே காரணம். மக்கள்என்னை தோற்கடிக்கவில்லை, அதிமுக கட்சி நிர்வாகிகளால் நான் தோற்கடிக்கப்பட்டுள்ளேன் என்பது இப்போது தான் எனக்கு தெரிந்தது.

எப்படியும் நாம் வெற்றிப்பெற்று விடுவோம் என்று நம்மிடம் இருந்த அலட்சியமே தோல்விக்கு மிக முக்கிய காரணம். வர உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற கட்சி நிர்வாகிகள் முழுமையாக பாடுபட வேண் டும். சட்டப்பேரவைத் தேர்தலில் இழந்த வெற்றியை உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மீட்டெடுப்போம். அதற்கான பணிகளை கட்சி நிர்வாகிகள் உடனடியாக தொடங்க வேண்டும். உங்களுக்கான ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர்களை நீங்களே தேர்வு செய்து, அவர்களை வெற்றிபெற செய்ய கடுமையாக உழைக்க வேண்டும்’’என்றார்.

இக்கூட்டத்தில், மாவட்டப் பொருளாளர் ராஜா, அவைத் தலைவர் ராஜேந்திரன், மகளிர் அணி செயலாளர் மஞ்சுளாகந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்