குமரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அனுமதியில்லாமல் இயங்கிவரும் தனியார் மீன்பதப்படுத்துதல் மற்றும் மீன் எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி பூத்துறையைச் சேர்ந்த ஆண்டர்சன் சேவியர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
பூத்துறை கிராமத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் தனியார் மீன் பதப்படுத்தும் மற்றும் மீன் எண்ணெய் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மற்றும் கழிவு பொருட்கள் கடலில் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி சுவாச கோளாறு, நுறையீரல் பாதிப்பு உட்பட பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர்.
» தமிழகம், புதுச்சேரியில் கரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர்கள் விவரங்கள் சேகரிப்பு
» ஜூலை 14 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்
இந்த ஆலையை மூட வேண்டும் என 2009-ல் இருந்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பொதுமக்களுக்கு தீங்கு விளைவித்து வரும் சட்டவிரோத ஆலையை மூட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ். ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிடுகையில், இந்த ஆலையிலிருந்து அதிகளவு யூரியா ,அமோனியா, மெர்குரி வாயு வெளியேற்றப்படுவதால் மக்களுக்கு புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்கள் வருகின்றன என்றார்.
இததையடுத்து நீதிபதிகள், மீன் பதப்படுத்தும் ஆலையை மூடி சீல் வைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், மின் வாரியம் உடனடியாக குடிநீர், மின்சார இணைப்பை துண்டிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago