முன்னுதாரணத் தோழருக்கு என் வந்தனங்கள் என, 100-வது வயதில் அடியெடுத்து வைக்கும் மூத்த இடதுசாரித் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா ஜூலை 15 (நாளை) தன் 100-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் சங்கரய்யா. இவருடைய 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்களும் கடந்த சில தினங்களாகவே வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர்.
மேலும், சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
» நீலகிரி, கோவையில் கனமழை; 10 மாவட்டங்களில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
» மேகதாதுவில் அணை கட்டுவதை நிறுத்த பிரதமருக்கு விரைவில் கடிதம்: புதுச்சேரி முதல்வர் முடிவு
இது தொடர்பாக, கமல்ஹாசன் இன்று (ஜூலை 14) தன் ட்விட்டர் பக்கத்தில், " 'வறுமையின் நிறம் சிவப்பு அல்ல; வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு' என முழங்கிய என்.சங்கரய்யா 100-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். விடுதலைப் போர் தொடங்கி இன்று வரை நீளும் நெடிய போராட்ட வரலாற்றினைக் கொண்ட முன்னுதாரணத் தோழருக்கு என் வந்தனங்களும் வாழ்த்துகளும்" எனப் பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago