நடிகர் ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, இனி ரசிகர் மன்றமாக செயல்படும் என சென்னையில் நேற்று முன்தினம் அறிவித்தார். அதற்கு முன்னதாகவே கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் தனது பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொண்டார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ரஜினி மக்கள் மன்றம் தொடங்கியபோது நான் இணை செயலாளராக நியமிக்கப்பட்டு பல்வேறு மக்கள் பணிகளை செய்ய வாய்ப்பு வழங்கிய தலைவர் ரஜினிகாந்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘கஜா’ புயல் உள்ளிட்ட பல்வேறு பேரிடர் காலங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அப்போதைய தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஏ.ஜோ.ஸ்டாலின் தலைமையில் நான் உட்பட பல மாவட்ட செயலாளர்கள் இணைந்து சேவைகளை செய்தோம்.
மேலும், நான் கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு,கரோனா ஊரடங்கில் அனைத்து தரப்பினருக்கும் உதவிகள், மருத்துவ உபகரணங்கள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகள் செய்ய வாய்ப்பு கிடைத்தது. என்னுடன் பணியாற்றிய அனைத்து மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை நிர்வாகிகள், மன்ற காவலர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கே.வி.எஸ்.சீனிவாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago