தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் எவருக்கும் வாக்குரிமை மறுக்கப்படவில்லை என்பதை அடுத்த தேர்தலில் உறுதி செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட வாடகை வாகன ஓட்டுநர்கள், தங்களால் தேர்தலில் வாக்களிக்க இயலவில்லை எனக் கூறி, தங்கள் வாக்குரிமையை உறுதிசெய்யக் கோரி, வாடகை வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர் எனவும், ஆனால் அவர்கள் வாக்களிப்பதை உறுதிசெய்யப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டது.

மேலும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்கள் அவர்கள் வாக்குகளைப் பதிவு செய்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த தேர்தல்களில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அனைவருக்கும் அவர்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்