மதுரை: காட்டாஸ்பத்திரியை ஹைடெக் அரசு மருத்துவமனையாக மாற்றிய மருத்துவர்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தமிழகத்தில் முதல்முறையாக நோயாளிகளுக்கு இலவச ஹேர் கட்டிங்

மருத்துவமனை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆஸ்டின்பட்டி காசநோய் அரசு மருத்துவமனை இருக்கிறது. 1960-ம் ஆண்டு இதே நாளில் (இன்று) அப்போதைய முதல்வர் காமராஜர் திறந்துவைத்த இந்த மருத்துவமனை 3 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் நடமாட்டம், மின்விளக்கு வெளிச்சமே இல்லாமல் புதர் மண்டி கிடந்ததால் அப்பகுதி மக்கள் காட்டாஸ்பத்திரி என்றே அழைத்துள்ளனர்.

இடிந்துவிழும் அபாய கட்டிடங்கள், துர்நாற்றம் வீசும் வார்டுகள், மதுபாட்டில் குவியல்கள், எங்கும் துருக்கறை படிந்த தரைகள் என மர்ம பங்களா போல் இந்த மருத்துவமனை இருந்தது. இந்த மருத்துவமனைக்கு பணிபுரிய மருத்துவர்கள், பணியாளர்கள் வரத் தயங்குவர். அதனால் மதுரை மாவட்டத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் மருத்துவர்கள் இந்த மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்வர். அப்படி ஏதோ ஒரு காரணத்துக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நிலைய மருத்துவராக இங்கு இடம் மாற்றப்பட்ட டாக்டர் காந்தி மதிநாதன் காட்டாஸ்பத்திரியாக இருந்த இந்த மருத்துவமனையை தற்போது ‘ஹைடெக் மருத்துவமனையாக மாற்றிக் காட்டி உள்ளார்.

இதற்காக அவர் அரசு உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. பள்ளி, கல்லூரி என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள், பொதுநல தன்னார்வ அமைப்புகளைக் கொண்டு புதர்மண்டிக் கிடந்த இந்த மருத்துவமனையை முதலில் சுத்தம் செய்தார். பின்னர் அரசு உதவியுடன் தன்னார்வலர்களைக் கொண்டு கட்டிடங்களைப் பராமரித்தார். நோயாளிகளைக் கொண்டே 2,500 மரக்கன்றுகளை நட்டு மருத்துவமனை வளாகத்தை பசுமையாக்கினார்.

நோயாளிகளுக்கு சுகாதாரமான உணவு, விளையாடுவதற்கு செஸ், கேரம் போர்டு, இறகுப்பந்து, பேட்மிட்டன் விளையாட்டு அரங்கம், பொழுதுபோக்குவதற்கு டி.வி., எஃப்.எம். ரேடியோ, மன அமைதிக்கு யோகா, நடைபயிற்சி செல்ல புல்தரை நடைபாதை, பூங்கா, நூலகம், பஸ் நிலையம் என தனியார் மருத்துவமனைகளே திரும்பி பார்க்கும் வகையில் வசதிகளை ஏற்படுத்தினார்.

இங்கு நோயாளிகள் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை தங்கியிருந்து சிகிச்சை பெறுவதால் நோயாளிகளுக்கு முகச்சவரம், முடி வெட்டாமல் முடி வளர்ந்துவிடும். அவர்களுக்கு முடிவெட்ட தற்போது இலவசமாக தமிழகத்திலேயே முதல்முறையாக இந்த மருத்துவமனையில் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் தொற்றுக்கிருமி பரவாத ஹைடெக் முடிதிருத்தும் நிலையம் அமைத்துள்ளார்.

நோய் தொற்றுக்கு அஞ்சி உறவினர்கள்கூட நோயாளியைப் பார்க்கவராத, இறந்தால் உடல்களை வாங்க வராத இந்த மருத்துவமனைக்கு தற்போது தனியார் மருத்துவமனையை நம்பாமல் செல்வந்தர்கள்கூட சிகிச்சை பெற வருகின்றனர். இந்த மருத்துவமனையின் சுற்றுச்சுழல், இங்குள்ள மருத்துவர்கள், பணியாளர்கள் அன் பான கவனிப்பு நோயாளிகளுக்கு மருத்துவமனை என்பதையே மறந்து வீட்டிலிருந்து சிகிச்சை பெறும் மனநிலையை ஏற்படுத்துகிறது. இதன் சிறப்பை கேள்விப்படும் மாணவர்கள் சுற்றுலா வந்து செல்வதுபோல் இந்த மருத்துவமனையை பார்த்து செல்கின்றனர்.

ஒரு விருதும் கிடைக்கவில்லையே!

இந்த மருத்துவமனை முன்னேற்றத்துக்காக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் கூறியது: 2012-ம் ஆண்டு இந்த மருத்துவமனை அவலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நான், சுகாதாரத் துறை செயலருக்கு மனு அனுப்பினேன். உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தேன். அதற்கும் பலனில்லை. இந்த மருத்துவமனையின் தற்போதைய இந்த மாற்றத்துக்கு முழு காரணம் அந்த மருத்துவமனையின் நிலைய அலுவலர், அங்கு பணிபுரியும் பணியாளர்களே. இத்தனை சிறப்பான மருத்துவ சேவை அளிக்கும் இந்த மருத்துவமனைக்கும், அதற்கு காரணமான நிலைய அலுவலருக்கும் விருது வழங்க அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்யாதது ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்