வருமான வரிக் கணக்கு குறித்த தவறான தகவலைக் கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, 1091 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் கே.சி.வீரமணி தோல்வியடைந்தார்.
இந்நிலையில், வேட்பு மனுவிலும், பிரமாணப் பத்திரத்திலும் தவறான தகவல்களைத் தெரிவித்ததாக கே.சி.வீரமணிக்கு எதிராகக் குற்றம் சாட்டியும், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் அத்தொகுதியின் வாக்காளர் ராமமூர்த்தி என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
» பார்வை மாற்றுத்திறனாளியின் சாட்சியத்தை ஏற்கக்கூடாது: வாதத்தை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்
» சீர்காழி வைத்தீஸ்வரன் கோயிலில் 3 ஏக்கர் குளம் ஆக்கிரமிப்பு: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
அப்போது, “முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, தனது வேட்பு மனுவில் வருமான வரிக் கணக்கு எண்ணைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது சொத்து விவரங்கள், வருமான வரிக் கணக்குடன் ஒத்துப்போகவில்லை. தவறான தகவல்களைத் தெரிவித்த அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை” என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், “இது சம்பந்தமாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்தி, மனுதாரரின் புகார் மனுவை முடித்து வைத்துவிட்டோம். மேலும், 1966ஆம் ஆண்டுக்கு முன், வேட்பு மனுவில் தவறான தகவல்கள் அளிக்கும் வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையமே புகார் அளித்து வந்துள்ளது. பின்னர், சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு எதிராக யார் வேண்டுமானாலும் குற்ற நடவடிக்கை எடுக்க வகை செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago