வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் இலவச மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ள கோவை விவசாயிகளுக்கு அழைப்பு

By க.சக்திவேல்

கோவை மாவட்ட வனவியல் விரிவாக்க கோட்டத்தின் மூலம் வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் விவசாயிகள் இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, வனவியல் விரிவாக்க கோட்ட அலுவலகம் இன்று (ஜூலை 11) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

"கோவை மாவட்ட வனவியல் விரிவாக்கக் கோட்டத்தின் மூலம் வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ், 1,95,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க தயார் நிலையில் உள்ளன. ஆர்வமுள்ள கோவை மாவட்ட விவசாயிகள் வன அலுவலர்களை தொடர்பு கொண்டு தேக்கு, மலைவேம்பு, மகாகனி, செம்மரம், புளி, வில்வம், நீர்மருது, வாகை, சந்தனம், வேங்கை, நெல்லி, ஈட்டி, பலா, புங்கன், வேம்பு மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.

அதன்படி, வனவியல் விரிவாக்க நாற்றங்கால், மேட்டுப்பாளையம் (97872 37131), கோவை வனக்கோட்ட நாற்றங்கால், மேட்டுப்பாளையம் (94430 10826), மத்திய நாற்றங்கால், வன வளாகம், வடகோவை (75501 56841), போளுவாம்பட்டி நாற்றாங்கால், இருட்டுபள்ளம் (94436 32026), வனவியல் விரிவாக்க நாற்றங்கால், மதுக்கரை (90806 79611) ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

மரக்கன்றுகளை வாங்க பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விவசாய நிலத்தின் சர்வே எண் குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு ஆவணம், ஆதார் அட்டை அல்லது வேறு ஏதாவது ஒரு அடையாள அட்டை நகல் ஆகியவற்றை அளிக்க வேண்டும்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்