புதுச்சேரியில் புதிதாக 134 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஜூலை 10) வெளியிட்ட தகவலில், ''புதுச்சேரி மாநிலத்தில் 6,045 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 96 பேருக்கும், காரைக்காலில் 25 பேருக்கும், ஏனாமில் 6 பேருக்கும், மாஹேவில் 7 பேருக்கும் என மொத்தம் 134 (2.22 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், காரைக்கால் வரிச்சிக்குடியைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளார். புதுச்சேரி, ஏனாம், மாஹேவில் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,769 ஆகவும், இறப்பு விகிதம் 1.49 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 18 ஆயிரத்து 831 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 230 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,343 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 1,573 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
» தனுஷ் படத்திலிருந்து விலகிவிட்டாரா கார்த்திக் நரேன்?
» காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார்
புதிதாக 255 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 489 (97.19 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 13 லட்சத்து 79 ஆயிரத்து 107 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 11 லட்சத்து 83 ஆயிரத்து 432 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது.
மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 5 லட்சத்து 73 ஆயிரத்து 26 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago