அரசு வேலை வாங்கித் தருவதாக 150-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் ரூ.5 கோடி கைவரிசை கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் அம்பலம்

By செய்திப்பிரிவு

திருவான்மியூர் அருகே உள்ளகொட்டிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஆனந்தி (35). இவர் அண்மையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அதில், வளசரவாக்கத்தைச் சேர்ந்த நந்தினி (37), அவரதுகணவர் அருண் சாய்ஜி (36), திருவான்மியூரைச் சேர்ந்த ரேஸ்மா தாவூத் (35) ஆகிய3 பேரும் தமிழ்நாடு அரசு துறையான அச்சு மற்றும் எழுதுபொருள் துறையில் உதவிபொது மேலாளர், மின்வாரியத்தில் உதவி பொறியாளர் உட்படபல பிரிவுகளில் வேலை வாங்கித் தருவதாக 85 பேரிடம் ரூ.4 கோடிவரை மோசடி செய்துள்ளனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து கடந்த மாதம் 30-ம் தேதி 3 பேரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், அவர்களை தங்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில், 3 பேரும்150-க்கும் மேற்பட்ட வேலைதேடும் இளைஞர்களிடம் ரூ.5 கோடி வரை பெற்று போலிபணி நியமன ஆணை கொடுத்து மோசடி செய்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலி நியமன ஆணை, கார்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.ரேஸ்மா தாவூத் தமிழ்நாடு முஸ்லிம் லீக் மாநில செயலாளராக பொறுப்பு வகிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது,

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்