அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? - தனியார் கல்லூரிகளில் சேர்க்கை தொடங்கியதால் பெற்றோர் அச்சம்

By என்.சன்னாசி

கரோனா ஊரடங்கு காரணமாக பிளஸ் 2 தேர்வுகள் நடத்த முடியாத சூழலில், மதிப்பெண்கள் வழங்குவதிலும் தொடர்ந்து தாதமதம் ஏற்படுவதால் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியவில்லை. ஆனால் சில தனியார் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுவதால் பெற்றோர்களும், மாணவர்களும் கவலை அடைந்துள்ளனர்.

ஜூலை இறுதிக்குள் பிளஸ் 2 மதிப்பெண் வழங்கப்படும் என அரசு நம்பிக்கை தெரிவிக்கும் நிலையில், ஆகஸ்ட் மாதம் இளநிலை பாடங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் என கல்லூரி முதல்வர்கள் கூறியுள்ளனர். கடைசி நேரத்தில் தங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை குறையலாம் என்ற அச்சத்தில் சில தனியார், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் முன்கூட்டியே ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறுகின்றனர். ஆனால் அரசு கல்லூரிகளில் இது போன்ற நடைமுறை பின்பற்றப்படாததால், மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் அரசு கல்லூரிகள் தவிர, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் முது நிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளனர். ஒருசில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறை முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை வகுப்பில் விரும்பிய பாடப்பிரிவில் இனச் சுழற்சியில் சேர 6 பருவங்களுக்கான மதிப்பெண் சதவீதம் தேவை என்றாலும், ஏற்கெனவே மாணவர் சேர்க்கையை தொடங்கியதால் அதிக மதிப்பெண் பெற்று, விரும்பிய கல்லூரிகளில் விரும்பும் பாடப்பிரிவுகளில் சேருவதற்கு வாய்ப்பு கிடைக்குமா என மாணவர் கள் தரப்பில் அச்சம் எழுந்துள்ளது.

இது குறித்து அரசு கல்லூரி முதல்வர் ஒருவர் கூறியது; அரசு கல்லூரிகளில் உயர்கல்வித்துறையின் வழிகாட்டுதல்படியே எந்த மாணவர் சேர்க்கையும் நடக்கும். இளநிலை, முதுநிலை பாடங்களுக்கான மாணவர் சேர்க்கை குறித்த தகவல் வரவில்லை. ஜூலை 15-ம் தேதி வரை மூன்றாமாண்டு, முதுநிலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கான இறுதி பருவத் தேர்வு ஆன் லைனில் நடக்கிறது. இதன்பின், விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, அதற்கான மதிப்பெண் வழங்கப்படும். இதனடிப்படையிலேயே முது நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கப்படுவர்.

தனியார் கல்லூரிகளில் அப்படி இல்லை. 5-வது பருவ மதிப்பெண் அடிப் படையில் தற்போது, விரும்பிய முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்ந்தாலும், கூடுதல் மதிப்பெண் பெறுவோருக்கு அரசு ஒதுக்கீடு அடிப்படையில் சீட் வழங்க வேண்டும். ஒருவேளை அரசு ஒதுக்கீடுக்கான சீட்களை நிலுவையில் வைத்துவிட்டு, நிர்வாக ஒதுக்கீட்டின்படி, மாணவர் சேர்க்கை நடத்தலாம். அரசு கல்லூரிகளில் இம்மாதம் இறுதியில் முதுநிலை வகுப்புகளும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் இளநிலை வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடக்க வாய்ப்புள்ளது, என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்