நீர்மட்டம் 66 அடியை எட்டியதால் வைகை அணையில் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு

By என்.கணேஷ்ராஜ்

நீர்வரத்து அதிகரிப்பினால் வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்துள்ளது. எனவே முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது.

கடந்த சில வாரங்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை மற்றும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் காரணமாகவும் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதனால் அணையின் நீர்மட்டம் நீர்மட்டம் 66 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து இன்று மதியம் 1.30 மணிக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது..

தற்போது அணைக்கு விநாடிக்கு ஆயிரத்து 564 கனஅடி நீர்வரத்து உள்ளது. 769 கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடந்த மே மாதம் 66 அடியை எட்டியதால் அப்போது முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஆண்டிலேயே இரண்டாம் முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE