புதிய ஆளுநர்கள் நியமனம்; ஒரு பெண் கூட இல்லையா?- ஏன் இந்த பாகுபாடு? - குஷ்பு கேள்வி

By செய்திப்பிரிவு

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு பெண் கூட இல்லாதது குறித்து குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகா உள்பட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று (ஜூலை 06) உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதன்படி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் விவரம்:

கர்நாடகா - தாவர் சந்த் கெலாட்

ஹரியாணா - பண்டாரு தத்தாத்ரேயா

மிசோரம் - ஹரிபாபு கம்பாம்பட்டி

இமாச்சல பிரதேசம் - ராஜேந்திரன் விஸ்வநாத்

மத்திய பிரதேசம் - மங்குபாய் சஹான்பாய் படேல்

கோவா - ஸ்ரீதரன் பிள்ளை

திரிபுரா - சத்யதேவ் நாராயணன்

ஜார்கண்ட் - ரமேஷ் பயஸ் நியமனம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: கோப்புப்படம்

இந்நிலையில், பாஜக நிர்வாகியான குஷ்பு, இன்று (ஜூலை 07) தன் ட்விட்டர் பக்கத்தில், "மேதகு குடியரசு தலைவரிடம் ஒரு கேள்வியை மட்டும் கேட்க விரும்புகிறேன். எந்தவொரு மாநிலத்திலும் இந்த பதவியில் அமர தகுதியான ஒரு பெண்ணை கூட நீங்கள் காணவில்லையா? ஏன் இந்த பாகுபாடு? உங்களிடமிருந்து இந்த செயல் வருவது வேதனையானது, காயப்படுத்துகிறது. நான் உங்களை புண்படுத்தவில்லை என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்