சுந்தரனார் பல்கலைக்கழகத்தை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்ற நடவடிக்கை: புதிய துணைவேந்தர் கே. பாஸ்கர் உறுதி

By அ.அருள்தாசன்

உலக அளவில் முதல் 200 பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய துணைவேந்தராக நேற்று பொறுப்பேற்ற முனைவர் கே. பாஸ்கர் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கோட்டைகுப்பம் கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் பாஸ்கர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலை பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். 1991-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார். 30 ஆண்டுகள் ஆய்வுத்துறையில் அனுபவம் மிக்கவர். அதில் 25 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியிருக்கிறார். ஜப்பான், ஸ்வீடன் போன்ற வெளிநாடுகளில் ஆய்வு படிப்புகளையும் மேற்கொண்டவர். அண்ணா பல்கலைக்கழக சர்வதேச விவகார மையத்தின் இயக்குநராக 2008 முதல் 2012 வரையும், 2012 முதல் இப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் படிக வளர்ச்சி மையத்தின் இயக்குநர் மற்றும் பேராசிரியராகவும் பணிபுரிந் தார். 28 சர்வதேச, தேசிய அளவிலான கருத்தரங்குகளை நடத்தியிருக்கிறார்.

2011-ம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழக சிறந்த ஆய்வாளர் விருதை பெற்றிருக்கிறார். இதுவரை 120 ஆய்வுக் கட்டுரை களை சர்வதேச அளவில் ஆய்விதழ்களில் வெளியிட் டுள்ளார். இவரது வழிகாட்டுதலில் 14 மாணவர்கள் பிஎச்டி பட்டம் பெற்றுள்ளனர். தற்போது 9 பேருக்கு இவர் வழிகாட்டுநராக இருக்கிறார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஜப்பானிய மொழிகள் தெரியும்.

உலகத் தரம்வாய்ந்த கல்வி

புதிய துணைவேந்தராக பொறுப்பேற்ற பாஸ்கர் ‘தி இந்து’ செய்தியாளரிடம் நேற்று கூறியதாவது: கலை மற்றும் அறிவியல் கல்வி வளர்ச்சியில் பல்கலைக்கழகம் சிறந்த இடத்தை பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். குறிப்பாக நிர்வாகம் மற்றும் பாடத்திட்டங்கள் சர்வதேச தரத்துக்கு மாற்றப்படும். இங்கு பயிலும் மாணவர்கள் சர்வதேச அளவில் உயர் கல்வி கற்கவும் ஆய்வுகளை மேற்கொள்ளவும் உரிய வழிகாட்டுதல்களை அளிப்போம். இதற்கான நிதியுதவிகளை பெறுவதற்கும் மாணவர்களின் தரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வந்து பயில ஏற்பாடு செய்யப்படும். வெளிநாட்டு மாணவர் சேர்க்கையை உயர்த்துவதன் மூலம் வருவாய் அதிகரிக்கும்.

மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வியை அளித்து அவர்களை நாட்டின் சிறந்த குடிமக்களாக்கவும், சிறந்த திறனுள்ளவர்களாக உருவாக் கவும் நடவடிக்கை எடுக்கப்படும். உலகத்தரமான பல்கலைக் கழகங்களின் பட்டியலில் முதல் 200 இடத்துக்குள் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தைக் கொண்டுவர அனைத்து நட வடிக்கையும் எடுக்கப்படும் என்றார் அவர்.

மாணவிகளுக்கு பாராட்டு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கணிதவியல் துறை, முதுநிலை மாணவ, மாண வியரிடையே மாநில அளவிலான விநாடி வினா போட்டியை கடந்த 15-ம் தேதி நடத்தியது. இப்போட்டியில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கணிதவியல் துறையிலிருந்து ரா. ஹெல்டா பிரின்ஸி, சோ. ஆறுமுக காவேரி, பொ. ஜெபா பெனினாள் ஆகிய 3 மாணவிகள் கொண்ட அணி பங்கேற்று முதலிடம் பெற்றுள்ளது. இந்த மாணவிகளை பல்கலைக்கழக துணைவேந்தர் கே. பாஸ்கர், துறைத் தலைவர் பேராசிரியர் ஜெ. பால்ராஜ் ஜோசப் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்