உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் அமைச்சர் பொன்முடியிடம் குவிந்த மனுக்கள்

By செய்திப்பிரிவு

திருவெண்ணெய்நல்லூர் அருகே வளையம்பட்டு, மே லமங்கலம், செம்மார், எரலூர், ஏனாதிமங்கலம், சிறுவானூர், ஏமப்பூர், மழவராயனூர், சிறுமதுரை, டி.எடையார், பனபாக்கம் மற்றும் அண்டராயனூர் ஆகிய கிராமங்களில் ‘உங்கள் தொகுதியில் முதல்வரின் துறை’ திட்டத்தின் கீழ் அமைச்சர் பொன்முடி நேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக் களை பெற்றுக் கொண்டார்.

சிமெண்ட் சாலைகள் அமைத்தல், தானிய களம், மயானம் அருகில் சாலை மேம்பாடு, கழிவுநீர் வாய்க்கால் மற்றும் சமுதாய கிணறு போன்றவைகள் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

மேலும் மாற்றுத்தி றனாளிகள், விதவைகள், முதியோர், முதிர்கன்னிகள் போன்றோர் உதவித்தொகை வேண்டியும், வீட்டு மனைப்பட்டா மற்றும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்குதல் போன்ற கோரிக்கை மனுக்களையும் இப்பகுதி மக்கள் அமைச்சர் பொன்முடியிடம் வழங்கினர்.

இப்பகுதி கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்டிருக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்திட வேண்டும். அனைத்து மனுக்கள் மீதும் உடனடியாக தீர்வு கண்டிட வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதா, மாவட்ட வருவாய் அலுவலர் (பொ)சரஸ்வதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா, மகளிர் திட்ட இயக்குநர் லலிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்