தமிழக அரசு அறிவித்த கரோனா நிவாரணத் தொகையை வழங்கக்கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மூன்றாம் பாலினத்தினர் மனு அளித்தனர்.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மூன்றாம் பாலினத் தினர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவா ரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தினர்களுக்கு அரசு அறிவித்த கரோனா நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவிடம், மூன்றாம் பாலினத்தினர் மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப்ப தாவது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தினர் வசித்து வருகிறோம். கரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு மூன்றாம் பாலினத்தினர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவா ரணம் வழங்குவதாக அறிவித்தது.
மாவட்ட சமூக நலத்துறை மூலம் நிவாரணம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருப்பத்தூர் மாவட்டத்தில் எங்களுக்கான அடையாள அட்டையை கொடுத்தபோது, புதிய அடையாள அட்டை உள்ளவர்களுக்கே கரோனா நிவாரணத் தொகை வழங்கப்படும் என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்து. எங்களது மனுவை நிராகரித்து விட்டனர்.
ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி ஆகிய வட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் நிவாரணத் தொகை வழங்கப் பட்டுள்ளது. திருப்பத்தூர் வட் டத்தில் வசித்து வரும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கரோனா நிவாரணத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை. சமூக நலத்துறை அதிகாரிகள் ஒரு தலை பட்சமாக செயல்படுகின்றனர்.
எனவே, எங்களுக்கு சேர வேண்டிய கரோனா நிவாரணத் தொகையை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தனர்.
மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஓரிரு நாளில் நிவாரணத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 min ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago