மத்திய அமைச்சர் அனைத்துப் பிரச்சினைகளையும் புரிந்து வைத்துள்ளது ஆச்சர்யம்; பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

By செய்திப்பிரிவு

''மத்திய அமைச்சர் அனைத்தையும் புரிந்து வைத்துள்ளார். எங்களை ஆச்சர்யப்படுத்திய விஷயம் என்னவென்றால் அனைத்துப் பிரச்சினைகளையும் அழகாகத் தெரிந்து வைத்துள்ளார். அதுதான் எங்கள் மனத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்தது'' என்று மத்திய அமைச்சர் சந்திப்புக்குப் பின் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்தைச் சந்தித்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:

“மத்திய அமைச்சர் செகாவத்தை நானும் பொதுப்பணித்துறைச் செயலரும் சந்தித்தோம். பேச்சுவார்த்தையைப் பொறுத்தவரை சுமுகமாக இருந்தது. அமைச்சர் மிக அந்நியோன்யமாகப் பழகினார். அதைவிடச் சிறப்பு நாங்கள் கொண்டுபோன பிரச்சினையை மிகத் தெளிவாக ஏற்கெனவே அவர் புரிந்து வைத்துள்ளார். அதுதான் ஆச்சர்யம்.

நாங்கள் பல பிரச்சினைகளைக் கிளப்பினோம். முதலில் எங்களுக்கு உச்ச நீதிமன்றம் இவ்வளவு டி.எம்.சி தண்ணீர் கொடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுவரையில் நமக்குக் கிடைக்கவேண்டிய 40, 50 டி.எம்.சியில் 8 டிஎம்.சி கூட கிடைக்கவில்லை அதனால் உடனடியாக கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தி தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீரை விடச் சொல்லுங்கள் என்று கேட்டேன். உடனடியாகப் பேசுவதாகச் சொன்னார்.

இரண்டாவது பிரச்சினை காவிரியில் மேகதாது பிரச்சினை. எந்த ஒரு உத்தரவு என்றாலும் கர்நாடக அரசு காவிரியில் நிறைவேற்றுவதாக இருந்தாலும் அண்டை மாநிலமான தமிழகத்திடம் கேட்டுத்தான் செய்யவேண்டும் என்று உத்தரவு உள்ளது. ஆனால், எங்களிடம் எதுவும் கேட்காமல், பேசாமல் நேரடியாக உங்களிடம் வந்து உங்களிடம் டிபிஆர் அறிக்கையை அளித்துச் செயல்படுவதும், மத்திய அரசிடம் விரிவான அறிக்கையைத் தயாரிக்கவும் அனுமதி பெற்றுள்ளார்கள். இது மத்திய அரசைப் பொறுத்தவரை சரியான அணுகுமுறை அல்ல என்பது எங்களது வாதம்.

அதற்கு அவர் எத்தனையோ திட்ட அறிக்கை அளிப்பதால் அணை கட்டிவிட முடியாது. எத்தனையோ திட்ட அறிக்கைகள் அலுவலகத்தில் உள்ளன. அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தைக் கேட்காமல் அனுமதி அளிக்க மாட்டோம். இரு தரப்பையும் அழைத்துப் பேசித்தான் எதுவும் நடக்கும் என்று தெரிவித்தார்.

அடுத்து மார்கண்டேய நதியில் ஒரு அணை கட்டியுள்ளார்கள். மேகதாது அணை கட்டவாவது டிபிஆர் அனுமதிக்கு உங்களிடம் வந்தார்கள். ஆனால், மார்கண்டேய அணையைக் கட்ட எங்களிடமும் கேட்கவில்லை. உங்களிடமும் டிபிஆர் அனுமதி கேட்கவில்லை. தன்னிச்சையாக அணை கட்டுகிறார்களே. இதற்கு என்ன பொருள். நாங்கள் உச்ச நீதிமன்றம் சென்றோம். 2017ஆம் ஆண்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பாயம் அமைக்க உத்தரவிட்டது.

அதை அமைக்க உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டோம். உடனடியாகத் தீர்ப்பாயம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். அடுத்து காவிரி ஆணையம் நீண்டகாலம் போராடிப் பெற்ற ஒன்று. ஆணையம் இருக்கிறதே தவிர முழு நேரத் தலைவர் இல்லை. மத்திய நீர்வளத்துறை தலைவர் இதற்குத் தற்காலிகத் தலைவர். அவர் எங்களிடம் பேசுவதே இல்லை. எங்கள் குறையைத் தலைவர் என்று ஒருவர் இருந்தால்தானே கூற முடியும் என்று சொன்னோம், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்துக்குத் தலைவரை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அடுத்து முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்துப் பேசினோம். எங்களிடம் அணை இருக்கும்போதே கேரளா பிரச்சினை செய்கிறது. கேரளாவிடம் அணை முழுதும் போனால் பிரச்சினை பெரிதாகும் என்று சொன்னோம். கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், 1974-ல் டிபிஆர் தயார் செய்தார்கள், இதுவரை இருக்கிறதா? இல்லையா என்றே தெரியவில்லை. நீங்கள் இணைக்கிறீர்களோ, இல்லையோ எங்களுக்கு மாநிலத்துக்குள் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் செய்ய உள்ளோம் அதற்கு நீங்கள் நிதி உதவி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

தாமிரபரணி ஆறு திட்டம் 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்று குறிப்பிட்டோம். அனைத்தையும் புரிந்து வைத்துள்ளார். எங்களுக்கு ஆச்சர்யப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் அனைத்துப் பிரச்சினைகளையும் அழகாகத் தெரிந்து வைத்துள்ளார். அதுதான் எங்கள் மனத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்தது”.

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்