கரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மூடப்பட்டிருந்த கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத்தலங்களான பிரையண்ட் பூங்கா, ரோஸ் கார்டன், செட்டியார் பூங்கா ஆகியவை கடந்த 75 நாட்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது.
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த ஏப்ரல் 20-ம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில், அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல இ-பதிவு முறையை ரத்து செய்தது. இதனால், கொடைக்கானல் சென்றுவர தடையில்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ்கார்டன் ஆகியவை திறக்கப்படும் என, தோட்டக்கலைத்துறையினர் அறிவித்தனர்.
இதையடுத்து இன்று காலை (ஜூலை 05) முதல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். இவர்களை தோட்டக்கலைத்துறையினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். உடல் வெப்பநிலை சோதித்த பிறகே சுற்றுலாப் பயணிகளை பூங்கா-வுக்குள் அனுமதித்தனர். தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கவும், முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தினர்.
» புதுக்கோட்டையில் இரட்டை இலக்கத்தில் குறைந்த கரோனா தொற்று: அமைச்சர் ரகுபதி தகவல்
» தமிழகத்துக்கு 71 லட்சம் தடுப்பூசிகள் பெற நடவடிக்கை: மா.சுப்பிரமணியன் தகவல்
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடை விழா மலர் கண்காட்சிகள் நடைபெறாத நிலையில், பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
அடுத்தக்கட்டமாக தமிழக அரசு கூடுதல் தளர்வுகளை அறிவிக்கும் நிலையில், மேலும் சுற்றுலாத் தலங்களான கோக்கர்ஸ்வாக், படகு சவாரி, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணாகுகை, மோயர்பாய்ண்ட், பசுமைபள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் படிப்படியாக திறக்கப்பட வாய்ப்புள்ளது.
கொடைக்கானல் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டதையடுத்து, படிப்படியாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால், சுற்றுலாப் பயணிகளும், இவர்களை வாழ்வாதாரமாக நம்பியுள்ள கொடைக்கானல் மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
21 hours ago