மலைவாழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகிக்க செல்லும் தன்னார்வலர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வனத்துக்குள் செல்ல அனுமதி இல்லை என்று, உதவி வனப்பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.
உடுமலையை அடுத்த மலைகிராமங்களில் சுமார் 4,000 பேர்வசிக்கின்றனர். ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால், பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அமல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் குழிப்பட்டி, மாவடப்பு, குருமலை உள்ளிட்ட மலை கிராமங்களில் கடந்த சிலநாட்களாக சிலருக்கு காய்ச்சல், சளி தொந்தரவு இருந்துள்ளது. எரிசனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக சிறப்புமுகாம் ஏற்பாடு செய்யப்பட்டு பரிசோதனையும், தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இதற்கிடையே, அங்கு 3 பேருக்கு கரோனா தொற்றுஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள தால், மலைவாழ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக தன்னார்வலர்கள் சிலர் மலை கிராமங்களுக்கு சென்று, அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை அளித்துஉதவினர். இதனால், தன்னார்வலர்கள் மூலமாக கரோனா தொற்று மலை கிராமங்களுக்கு பரவியிருக்கலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. இதனால், கரோனா நிவாரண உதவி செய்ய முன்வருவோருக்கு, வனத்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட உதவிவனப் பாதுகாவலர் கே.கணேஷ்ராம் கூறும்போது, "வனத்துறை சார்பில் மலைவாழ் மக்களுக்கு தொடர்ந்து கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 3 பேருக்குதொற்று உறுதிசெய்யப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை கிடைக்கவும்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் சிலர் நிவாரணப் பொருட்கள் அளிக்க முன்வருகின்றனர். இனிமேல், மலைவாழ் மக்களுக்கு நேரில் சென்று உதவ நினைப்போர்,கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியவராக இருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வனத்துக்குள் செல்ல அனுமதி இல்லை" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago