பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தமிழகத்திலுள்ள 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியேற்றனர். ஆனால், புதிய மாவட்டங்கள் உதயமானதால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தொகுதி வரையறைப் பணிகள் காரணமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்தத் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என அண்மையில் உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருப்பதால், தேர்தலை எதிர்கொள்ள திமுக மற்றும் அதிமுக தலைமை ஆயத்தமானாலும், ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள திமுக, அதிமுக நிர்வாகிகள் மத்தியில் தயக்கம் நிலவுகிறது.
இதுகுறித்துப் பேசிய திமுக பிரமுகர் ஒருவர், ''28 மாவட்டங்களில் தேர்தல் நடந்து முடிந்து ஒன்றரை ஆண்டுகளாகிவிட்டன. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது தேர்தல் நடத்தினால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுபவர்களுக்கான பதவிக் காலம் எத்தனை ஆண்டு என்ற கேள்வி முன் நிற்கிறது. புதிதாகத் தேர்வு செய்யப்படும் 9 மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும், ஏனைய 38 மாவட்டங்களில் தேர்வு செய்யப்படும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பிரதிநிதிகளுக்கும் பதவிக்காலம் 5 ஆண்டுகளா அல்லது 3 ஆண்டுகளா என்று குழப்பம் நீடிக்கிறது.
ஏற்கெனவே 28 மாவட்டங்களில் நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலின்படி கணக்கில் கொண்டால் 3 ஆண்டுகள்தான் பதவியில் நீடிக்க முடியும் என்ற நிலை உள்ளது. அப்படி 3 ஆண்டுகள்தான் பதவியில் இருக்கமுடியும் என்றால் சட்டப்பேரவையில், பதவிக் காலக் குறைப்புக்கான மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும். இவையெல்லாம் நிர்வாக ரீதியான சிக்கல்கள்.
அதே நேரத்தில் போட்டியிடும் எங்களுக்குப் பொருளாதார ரீதியான பிரச்சினை உள்ளது. 3 ஆண்டுகளுக்கு இவ்வளவா செலவு செய்வது என்ற கேள்வி எழுகிறது. இது திமுகவுக்கு மட்டுமல்ல அதிமுகவுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கூட்டணிக் கட்சிகளின் குழப்பம் வேறு'' என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago