தமிழகத்தில் தந்தை பெரியார் வெண்தாடி வேந்தராக இருப்பதைப்போல குஜராத்தின் வெண்தாடி வேந்தராக நரேந்திர மோடி உள்ளார் என்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகழ்ந்தார்.
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் ஏ.எம்.காமராஜ் மற்றும் பெரும்புதூர் மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் டாக்டர் மாசிலாமணி ஆகியோரை ஆதரித்து போரூர் சிக்னல் அருகே உள்ள குன்றத் தூர் மெயின் ரோட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஞாயிற்றுக் கிழமை பிரச்சாரம் மேற் கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிதான் முதல் கூட்டணி, மக்கள் கூட்டணி. எங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. சில பத்திரிகைகள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடிக்கின்றன. ஜெயலலிதாவின் கனவு பலிக்காது.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுப்போய் உள்ளது. அது முதல்வருக்கு தெரியவில்லையா? அதிகமான லஞ்சத்தை வாங்கி வீட்டில் வைப்பதால்தான் போலீ ஸார் வீட்டிலேயே கொள்ளை நடக்கிறது.
குஜராத்தில் மோடி ஊழலற்ற ஆட்சியை நடத்தி வருகிறார். அங்கு சுகாதாரம், தொழில்வளம், விவசாய வளம் மூன்றும் இருப்பதால் 3 முறை மோடி முதல்வராகி உள்ளார். தமிழகத்தில் இந்த மூன்று வளங்களும் இல்லை.
தமிழகத்துக்கு பெரியார் வெண்தாடி வேந்தர். குஜராத் துக்கு மோடிதான் வெண்தாடி வேந்தர். குஜராத்தில் ஒரு போலி ரேஷன் கார்டுகூட கிடையாது. மக்களோடு மோடி நேரடித் தொடர்பில் இருக்கிறார்.
தமிழக முதல்வர் மக்களோடு தொடர்பில் இல்லை. மக்களின் பிரச்சினை பற்றி முதல்வர் கண்டுகொள்வதில்லை. அவர் வானத்திலேயே செல்கிறார். தரையில் வந்தால்தானே மக்கள் பிரச்சினை தெரியும்?
ஒரு தராசுத் தட்டில் திமுகவை யும் அதிமுகவையும் வைத்துப் பார்த்தால் இரண்டும் சமமாகத்தான் இருக்கும்.
இவ்வாறு விஜயகாந்த் பேசி னார்.
குறுகலான சாலையில் பிரச் சாரம் நடந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago