தமிழக பொது நூலகத் துறையில் மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்கள் 22 மாவட்டங்களில் காலியாக உள்ளன. இதனால் ஏற்பட்ட கூடுதல் பொறுப்பால் நூலகத் துறை செயல்பாடு தேக்கமடைந்துள்ளது.
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 32 மாவட்ட மைய நூலகங்கள், 4,012 கிளை நூலகங்கள், ஊர்ப் புற நூலங்கள் மற்றும் பகுதி நேர நூலகங்கள் உள்ளன. தற்போது, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், தருமபுரி, தஞ்சாவூர், வேலூர், திருநெல்வேலி, திரு வண்ணாமலை, விழுப்புரம், நாமக்கல் ஆகிய 10 மாவட்டங் களில் மட்டுமே மாவட்ட நூலக அலுவலர்கள் பணிபுரிகின்றனர். மற்ற 22 மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இம்மாவட்டங்களில் முதல்நிலை ஆய்வாளர், முதல்நிலை நூலகர் பணியிடத்தில் இருப்பவர்களே கூடுதலாக மாவட்ட நூலக அலுவலர் பொறுப்பையும் ஏற்றுள்ளனர்.
மாவட்ட நூலக அலுவலராக பதவி உயர்வு பெறாத நூலகர்கள் கூடுதல் வேலைப் பளு, மற்றும் ஊதிய உயர்வு இல்லாமல் அதி ருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து பொது நூலகத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் ந.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
2007-ம் ஆண்டுக்குப் பிறகு நூலகத் துறையில் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. சமீபத்தில் ஊர்ப்புற நூலகராக இருந்த வர்களுக்கு மட்டுமே கிளை நூல கர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த துறையில் வேறு எவருக் கும் பதவி உயர்வு வழங்கப்பட வில்லை.
இயக்குநர் பதவிகளும் காலி
பதவி உயர்வு கிடைக்கும்பட் சத்தில் அடிப்படை ஊதியம், தர ஊதியம் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது. பதவி உயர்வு இல்லாமல் முதல்நிலை நூலகர், ஆய்வாளர்களாகவே பலர் ஓய்வு பெறும் அவலம் ஏற்பட்டுள்ளது. நூலகத் துறை இயக்குநர், இணை இயக்குநர், துணை இயக்குநர் பதவிகளும் காலியாக உள்ளன. இப்பணிகளை கூடுதல் பொறுப் பாக கல்வித் துறையைச் சேர்ந் தவர்களே கவனிக்கின்றனர்.
முன்பு, நூலகத் துறை இயக்கு நராக ஐஏஎஸ் அந்தஸ்தில் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். தற்போது பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கூடுதல் பொறுப்பாக நூலகத் துறை இயக்குநராக இருக் கிறார். கல்வித் துறை நிர்வாகம் கடல் போன்றதால் அவரால் நூல கத் துறையை கூடுதல் பொறுப் பாக கவனிக்க முடியவில்லை. அதனால், நூலகத் துறை கோரிக் கைகளை யாரிடம் சென்று முறை யிடுவது எனத் தெரியவில்லை.
முடங்கிக் கிடக்கும் துறை
நூலகத் துறை வருவாய் கிடைக்கும் துறை. உள்ளாட்சித் துறைகள் மக்களிடம் வசூலிப்பதில் 10 சதவீத வரி நூலகத் துறைக்கு கிடைக்கிறது. குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு ரூ.6 கோடி, கோவை மாநகராட்சிக்கு ரூ.3 கோடி வருவாய் நூலகத் துறைக்கு ஆண்டுதோறும் கிடைக்கிறது. இந்த வரி வருவாயை சரியான முறையில் பயன்படுத்தாததால் இத் துறை செயல்பாடு இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago