மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத் தும் பணிக்காக வாகனங்களை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடைபெற் றது.

மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கொடிய சைத்து வாகனங்களை தொடங்கி வைத்தார். பின்னர் ஏமூரில் பார்வை யற்ற மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ஆய்வு செய்தார். அப்போது, “கரூர் மாவட்டத்தில் உள்ள 6,079 மாற்றுத்திறனாளிகளுக்கும் வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தப்படும்” என்றார்.

தொடர்ந்து வெங்கமேடு பெரியகுளத்துப்பாளையத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் மக்கள் சபை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப் பிரமணியன் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத் முன்னிலை வகித்தார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி பொதுமக்களிடமிருந்து மனுக் களை பெற்றுக்கொண்டார். பின் னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தற்போது கூட்டத்தில் பெறப்பட்ட 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்படும். மக்கள் சபை வாரந்தோறும் நடத்தப்படும். மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணம் தெரிவிக் கப்படும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE