ஏலகிரி மலையில் சுமார் 8 ஏக்கரில் பழத்தோட்டம் அமைப்பது குறித்த புதிய திட்ட அறிக்கையை சமர்ப் பிக்க மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரி மலை கிராமங்களில் நடைபெறும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். ஏலகிரியில் ரூ.2 கோடி நிதியில் கட்டப்பட்டுள்ள கோடை விழா கலை அரங்கை பார்வையிட்டு, அதன் பயன்பாடுகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். இயற்கை சூழலுடன் அமைந்துள்ள இடங் களில் திருமணம் நடத்திட பெரிய நகரங்களில் பலர் விரும்புகின்றனர். அந்த வகையில் ஏலகிரி கலை அரங்கில் திருமணங்களை நடத்துவது குறித்த விளம்பரத்தை செய்ய ஏற்பாடு செய்யவும், அரங்கின் ஒரு பகுதியில் சமையல் கூடம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, ஏலகிரி மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடை பெற்று வரும் கரோனா தடுப்பூசி முகாமை அவர் ஆய்வு செய்தார். ஏலகிரி மலை கிராமங்களில் உள்ள 27 மாற்றுத்திறனாளிகளில் இதுவரை 7 பேர் மட்டுமே கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். மற்றவர்களுக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த தேவையான நடவடிக் கையை எடுக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஏலகிரி மலையில் 8 ஏக்கரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பழத்தோட்ட திட்டம் குறித்து கேட்டறிந்த ஆட்சியர், பழத் தோட்டம் அமைப்பதற்கான புதிய திட்ட அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். மேலும், ஏலகிரி மலையில் பாரா கிளைடிங், வாகன பயணம் போன்ற சாகச நிகழ்ச்சிகளை நடத்த ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், ஏலகிரி மலை கிராமத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள குடியிருப்புகளின் விவரங்களை சேகரித்து ஒவ்வொரு குடியிருப்பு மக்களும் அரசின் திட்டங்களில் பயன்பெற்றார்களா? என்ற விவரத்தை சேகரிக்க வேண்டும் என்றும் அனைத்துத் தரப்பினரும் அரசின் திட்டங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago