‘அதிகாரிகள் சொன்னதை செய்யாததால் விவசாயம் செய்ய முடியவில்லை,’ என கீழடி அகழாய்வுக்கு இலவசமாக நிலம் கொடுத்த விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருப்புவனம் அருகே கீழடியில் 110 ஏக்கரில் தொல்லியல் மேடு அமைந்துள்ளது. இங்கு 2014 முதல் அகழாய்வு நடந்து வருகிறது. ஏற்கெனவே மூன்று கட்ட அகழாய்வு மத்திய தொல்லியல்துறை மூலமாகவும், நான்கு, ஐந்து மற்றும் 6-ம் கட்ட அகழாய்வு தமிழக தொல்லியல்துறை மூலம் நடந்தன. தற்போது 7-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது.
அகழாய்வு நடக்கும் இடங்கள் பெரும்பாலும் தனியார் விவசாய நிலங்கள். இதனால் அகழாய்வு தொடங்கியபோது, குழிகள் தோண்டினால் விவசாயம் பாதிக்கும் எனக் கூறி விவசாயிகள் தங்களது நிலத்தை தர மறுத்தனர்.
இதையடுத்து வருவாய்த்துறை, தொல்லியல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, விவசாயத்திற்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்தனர்.
» பெரியகுளம் அருகே சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு
» புதுச்சேரியில் 298 பேருக்கு கரோனா தொற்று: மேலும் 3 பேர் உயிரிழப்பு
இதையடுத்து விவசாயிகள் தங்களது நிலத்தை அகழாய்வு பணிக்கு இலவசமாக கொடுத்தனர். ஆறு கட்ட அகழாய்வு பணிகள் முடிந்தநிலையில் அதற்காக தோண்டப்பட்ட குழிகளை தொல்லியல்துறையினர் மூடிவிட்டனர். இந்நிலையில் அதிகாரிகள் சொன்னதை செய்யாததால் விவசாயம் செய்ய முடியவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கொந்தகையைச் சேர்ந்த சுரேஷ் கூறுகையில், ‘அகழாய்வு பணிக்கு நானும் எனது சகோதரி சேதுராமும் தலா ஒரு ஏக்கர் நிலத்தை கொடுத்தோம். எனது சகோதரி நிலத்தில் மின்கம்பம் சேதமடைந்து ஓராண்டாக மின்சாரமின்றி உள்ளது. அகழாய்வு தொடங்கியபோது மின்சாரத்தை சரிசெய்து கொடுப்பதாகவும், சொட்டுநீர் பாசன வசதி ஏற்படுத்தி தருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அகழாய்வுக்காக தோண்டிய குழிகளை மூடியநிலையில், இதுவரை சொன்னதை செய்யவில்லை. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கிறோம்,’ என்றார்.
இதுகுறித்து தொல்லியல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து மாவட்ட நிர்வாத்திடம் தெரிவித்துள்ளோம்,’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago