புதுச்சேரியில் புதிதாக 228 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று(ஜூன் 26) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 8,018 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-166, காரைக்கால்-43, ஏனாம்-13, மாஹே-6 என மொத்தம் 228 (2.84 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் ஒருவர், காரைக்காலில் ஒருவர் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். மாஹே, ஏனாமில் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,741 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.50 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 16 ஆயிரத்து 414 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 474 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 2,301 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 2,775 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
» 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள்; அனைத்து சொத்து விவரங்களை பராமரிக்க புதிய இணையதளம்
» ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100: திருவனந்தபுரம், பாட்னாவிலும் சதமடித்தது
புதிதாக 421 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 898 (96.12 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 12 லட்சத்து 76 ஆயிரத்து 71 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
இதில் 10 லட்சத்து 96 ஆயிரத்து 58 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 4 லட்சத்து 63 ஆயிரத்து 464 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago