சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. இதில் திமுக சார்பில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டார். மே 2 அன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் கஸாலியை விட 69 ஆயிரத்து 355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவரது வெற்றியை எதிர்த்து, அத்தொகுதியின தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், “உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தன் மீதான குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளார். அவரது வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டதை செல்லாது என அறிவிக்க வேண்டும். தொகுதியில் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என அறிவிக்க வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
» நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு மட்டும் சாத்தியமா?
» பான் - ஆதார் எண் இணைக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் ஓரிரு வாரங்களில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago