சிவகங்கை அருகே அரசு கட்டிக் கொடுத்த வீடுகள் இடிந்து விழுந் ததால் கிராம மக்கள் கோயிலில் குடியேறினர்.
சிவகங்கை அருகே காடனேரி தெற்கு தெருவில் 50-க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் பெரும்பாலானோர் விவசாயக் கூலிகளாக உள்ளனர். இதில் 25 குடும்பத்தினருக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக் கப்பட்டன.
இந்த வீடுகள் பழுதடைந்து மேற்கூரைகள் அடிக்கடி இடிந்து விழுந்து வருகின்றன. இதுவரை 16 வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்துள்ளன. இருதினங்களுக்கு முன்பு சுப்பிரமணி, மாரிமுத்து ஆகியோரது வீடுகள் இடிந்து விழுந்தன.
இதில் சுப்பிரமணி காய மடைந்தார். இதனால் அச்சம டைந்த கிராம மக்கள் அங்குள்ள முத்துமாரியம்மன் கோயிலில் குடியேறினர். மேலும் அங்கேயே சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். மேலும் 50 குடும்பங்கள் உள்ள நிலையில் 25 குடும்பங்களுக்கு மட்டுமே வீடுகள் உள்ளன. இத னால் ஒரே வீட்டில் 2 முதல் 3 குடும்பங்கள் வரை வசித்து வருகி ன்றன. இதையடுத்து 50 குடும்பங் களுக்கும் புதிதாக வீடு கட்டித் தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கண்ணப்பன் என்பவர் கூறியதாவது:
வீடுகளின் மேற்கூரை அடிக்கடி இடிந்து விழுவது குறித்து, கடந்த ஆண்டு அப்போதைய ஆட்சியர் ஜெயகாந்தனிடம் மனு கொடுத்தோம். எங்களது வீடுகள் முழுமையாகப் பழுதடைந்து விட்டதால், அனைவருக்கும் புதி தாக வீடுகள் கட்டித் தருவதாகக் கூறினார். காளையார்கோவில் வட் டார வளர்ச்சி அலுவலரும் ஆய்வு செய்தார்.
அதன்பிறகு நடவடிக்கை இல்லாத நிலையில் இருதினங் களுக்கு முன்பு வீடு இடிந்ததில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் வீடுகளில் வசிக்க முடி யாமல் கோயிலில் குடியேறி உள் ளோம்,’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago