பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, படப்பிடிப்புக்கு அனுமதி: கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தளர்வுகள் என்னென்ன? 

By செய்திப்பிரிவு

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, திரைப்படப் படப்பிடிப்புக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

"மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வகை 1 - (11 மாவட்டங்கள்)

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்

வகை 1-ல் உள்ள மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில கடைகள் / செயல்பாடுகளுக்கு மாலை 7 மணி வரை நேரத் தளர்வு அளிப்பதுடன், கூடுதலாகப் பின்வரும் செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகின்றன.

· தேநீர்க் கடைகளில் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.

· மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· ஹார்டுவேர் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ/ வீடியோ, சலவை, தையல் அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· வாகன விநியோகஸ்தர்களது விற்பனை மற்றும் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· கணினி வன்பொருட்கள், மென்பொருட்கள், மின்னனு சாதனங்களின் உதிரிபாகங்கள் (Computer Hardware, Software, Electronic Appliances Spare Parts) விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை அனுமதிக்கப்படும்.

· கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதர அரசு அலுவலகங்கள், 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

· சார் பதிவாளர் அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

· அனைத்துத் தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள், 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

· வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், தானியங்கி பணம் வழங்கும் (ATM) சேவைகள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

· இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) மற்றும் அதன் செயல்பாடுகள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

· ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

· இதர தொழிற்சாலைகள் 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

· தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 20% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

· வீட்டு வசதி நிறுவனம் (HFCs) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs), குறு நிதி நிறுவனங்கள் (MFIs) 33 சதவிகிதப் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

· கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களின் அலுவலங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

· அனைத்து வகையான கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும்.

· அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Saloons, Spas) குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· காலை 6.00 மணி முதல் மாலை 9.00 மணி வரை விளையாட்டுப் பயிற்சிக் குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், அனுமதிக்கப்படும்.

· பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகள் அனுமதிக்கப்படும்.

· அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் காலை 6.00 மணி முதல் காலை 9.00 மணி வரை நடை பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

· இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகளில் பார்சல் சேவைகள் மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும்.

· இ-சேவை மையங்கள் வழக்கம் போல இயங்கும்.

· மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களும், உணவகங்கள் மற்றும் அடுமனைகளில் (hotels, restaurants and bakeries) பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும்.

· இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் (E-commerce) அனைத்தும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 வரை இயங்கலாம்.

· திரைப்படத் தயாரிப்புக்குப் பின்னர் உள்ள பணிகள் அனுமதிக்கப்படும்.

· திறந்த வெளியில், திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 100 நபர்கள் மட்டும் கரோனா RTPCR பரிசோதனை மேற்கொண்ட பின்னர் பங்கேற்கலாம் என்ற நிபந்தனையுடன் அனுமதிக்கப்படும்.

· திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்புப் பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்''.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்