விடுபட்ட மாணவர்கள் அனைவருக்கும் இலவச லேப்டாப்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

By கி.மகாராஜன்

விடுபட்ட மாணவர்கள் அனைவருக்கும் இலவச லேப்டாப் விரைவில் வழங்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த காவுதீன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

’’தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ரூ.912 கோடி ஒதுக்கப்பட்டு, 9.12 லட்சம் லேப்டாப்புகள் வாங்கப்பட்டன. இலவச லேப்டாப்பால் அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். 2017- 2018ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் 2018 முதல் 2021 வரை மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய கல்வியாண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கவில்லை. 2017- 2018ஆம் கல்யாண்டில் பயின்ற மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க உத்தரவிட வேண்டும்’’.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி டி.எஸ்.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசுத் தரப்பில், ’’விடுபட்டுள்ள மாணவர்களுக்கு வழங்குவதற்காக லேப்டாப்புகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும்’’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ’’அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இருப்பினும் மாணவர்களின் படிப்புக்கு லேப்டாப் மிகவும் அவசியமானது. இதனால் விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இத்துடன் வழக்கு முடித்து வைக்கப்படுகிறது’’ எனத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்