குண்டர் சட்டத்தை பயன்படுத்துவது எப்படி? - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By கி.மகாராஜன்

மதுரையைச் சேர்ந்தவர் ராஜிவ். இவர் மீது கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உள்ளன. இதனால் இவரை குண்டர் சட்டத்தில் சிறை யில் அடைக்க மதுரை மாநகர் காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ராஜிவ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆள் கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.சிவகுமார், வி.எஸ்.ரவி ஆகி யோர் நேற்று பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் மீதான முதல் வழக்கில் 114 நாள் சிறையில் இருந்துள்ளார். அந்த வழக்கில் போலீஸார் விசாரணையை முடித்துவிட்டனர். இதனால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 2வது வழக்கில் 15 நாள்தான் சிறையில் இருந் துள்ளார். இந்த சூழலில் அவர் முதல் வழக்கில் ஜாமீன் பெற்ற தால், 2-வது வழக்கிலும் ஜாமீன் பெற்றுவிடுவார் என குண்டர் சட் டத்தில் சிறையில் அடைக்க மாநகர் காவல் ஆணையர் கூறிய காரணத்தை ஏற்க முடியாது.

இரு வழக்கிலும் உள்ள வேறுபாட்டைக் குறிப்பிட்டு ஆணையர் உத்தர விட்டிருந்தால் ஏற்கலாம். இந்த வழக்கில் காவல் ஆணையர் முழு கவனம் செலுத்தவில்லை. இதனால் மனுதாரர் மீதான குண்டர் சட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

தமிழகத்தில் அதிகளவில் குண்டர் சட்டம் பயன்படுத்தப்படு வதை நீதிமன்றம் அங்கீகரிக்க வில்லை. குற்றவாளிகள் ஜாமீன் பெறுவதைத் தடுக்க சட்டரீதியாக பணிபுரிவதை விட்டு, குண்டர் சட் டத்தின் மூலம் குற்றவாளி ஜாமீன் பெறுவதை தடுப்பது சரியல்ல. குண்டர் சட்ட உத்தரவுகள் பிறப் பிக்கும்போது முழு கவனம் செலுத் தாமல் அஜாக்கிரதையாக செயல் படுவதுடன், பல தவறுகள் செய்வ தால் அந்த உத்தரவுகள் பலவீனம் அடைகின்றன. குண்டர் சட்ட உத்தரவுகளை பிறப்பிக்கும் போது மிகவும் கவனமாகவும், அரிதாகவும், எந்த வழக்கில் பயன்படுத்த வேண்டுமோ, அந்த வழக்கில் தான் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும்போது குறைபாடுகள் இல் லாமல் பார்த்துக்கொள்ள வேண் டும்.

குண்டர் சட்ட உத்தரவுகள் தனி மனித சுதந்திரத்தை பறிப்பதுடன் விசாரணை இல்லாமல் ஒருவரை சிறையில் அடைக்க வழிவகை செய்வதால் சிறிய தவறு இருந்தா லும் அந்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் குண்டர் சட்ட உத்தரவுகள் பிறப்பிக் கும்போது அதிகாரிகள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவில் கூறி யுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்