ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா 2வது அலையினால் நோய்த்தொற்று ஏற்பட்டு உயிரிழப்புகளும் அதிகரித்தன.
இதனை தடுப்பதற்காக சுகாதாரத்துறையினரால் மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத்துறையினருடன் இணைந்து கீழக்கரையைச் சேர்ந்த சின்னக்கடை தெரு மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்கம் மற்றும் மக்கள் டீன் இணைந்து நடத்திய கரோனா தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
» சேலம் அருகே சந்தன மரங்களை வெட்டிக் கடத்தல்: மக்கள் புகார்
» மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
கீழக்கரை சின்னக்கடைத் தெரு சங்கத்த்தில் வட்டாட்சியர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் கீழக்கரை காவல் ஆய்வாளர் செந்தில் குமார் அரசு மருத்துவர் ராசீக்கின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் 199 பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி கரோனா தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த முதல் 10 நபர்களுக்கு எவர்சில்வர் பாத்திரங்கள் வழங்கப்பட்டது. பின்னர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு குலுக்கல் முறையில் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மின் விசிறி வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
51 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago