வயது மூப்பின் காரணமாக மரணமடைந்த ராஜராஜன் என்ற மோப்ப நாய் காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது
தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையில் ராஜராஜன், சச்சின், சீசர், டாப்சி உள்ளிட்ட மோப்ப நாய்கள் துப்பறியும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக துப்பறியும் பணியில் ஈடுபட்ட ராஜராஜன் என்ற மோப்பநாய் நேற்று (ஜூன் 21) மாலை வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்தது.
இந்த ராஜராஜன் என்ற மோப்ப நாய் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் துப்பறியும் பணியை சிறப்பாக செய்துள்ளது. இந்நிலையில், மரணமடைந்த ராஜராஜனின் உடல் துப்பறிவு பிரிவு அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு, காவல்துறையினர் மாலையணிவித்து, 21 குண்டுகள் முழங்க போலீஸார் இறுதி மரியாதை செலுத்திய பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.
துப்பறியும் பிரிவு துணை கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் காவல்துறையினர் நேற்று இரவு மரியாதை செய்து இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago