மேல்மலையனூரில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு அரசின் நிவாரண உதவி வழங் கப்பட்டது.
கோயில்களில் மாத ஊதிய மின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும்14,000 நபர்களுக்கு உதவித் தொகை ரூ.4,000 மற்றும் 10 கிலோஅரிசி மற்றும் 15 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டி ருந்தார். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 262 நபர் களுக்கு ரூ.10,48,000, 2,620 கிலோ அரிசியும், 15 விதமான மளிகைப் பொருட்களும் வழங்கப்பட உள்ளன.
இதையடுத்து மேல்மலை யனூர் அங்காளம்மன் கோயில் வளாகத்தில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்கள் என 88 நபர்களுக்கு தலா ரூ.4,000 மற்றும் 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகைப் பொருட்களை அமைச்சர் மஸ்தான் நேற்றுவழங்கினார். அவர் பேசுகை யில், "விழுப்புரம் மாவட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 306 கோயில்களில் ஒருகால பூஜைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
13 கோயில்களில் அன்னதானத் திட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண உதவித்தொகையாக ரூ.4,000 வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவித்தார். இதையடுத்து அவலூர்பேட்டையில் பேரூந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, விழுப்புரம் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ராமு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago