செங்கல்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக தொண்டர்களை தொலைபேசி வாயிலாக திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடும் சசிகலாவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் ஏற்பாட்டில், திருக்கழுக்குன்றம் அருகே வடகடும்பாடியில், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதேபோல் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வண்டலூர் அருகேரத்தினமங்கலத்தில் மாவட்ட அவைத்தலைவர் கே.என்.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், அனைத்துலக எம்ஜிஆர் மன்றத் தலைவர்டி.கே.எம்.சின்னையா, ஒன்றிய செயலாளர்கள் என்.சி.கிருஷ்ணன், எம்.கஜா (எ) கஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சிதலைவராக பொறுப்பேற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமி, துணைத்தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
அதிமுக தொண்டர்களை திசைதிருப்பும் முயற்சியில், சசிகலாஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும், அதை ஊர் அறிய தொலைகாட்சிகளில் ஒளிபரப்புவதுமாக வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வரும் செயலைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரோனா பேரிடர் காலத்தில் உயிரிழந்த நிர்வாகிகளுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால் அதை எதிர்கொள்ள நிர்வாகிகள் தயாராக இருக்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago