சொத்துகள் சட்டவிரோதமாக 3ஆம் நபர் பெயரில் பத்திரப் பதிவு: தடுப்பதற்கு உள்ள வசதி என்ன?- உயர் நீதிமன்றம் கேள்வி

By செய்திப்பிரிவு

சொத்துகள் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்கள் பெயரில் பதிவு செய்வதைத் தடுப்பதற்கான வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக பதிவுத்துறை தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுக்காவில் உள்ள செட்டிக்குப்பம் எனும் கிராமத்தில் உள்ள தனது சொத்து, வேறு ஒருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அது சம்பந்தமான விற்பனைப் பத்திரத்தை ரத்து செய்ய மரக்காணம் சார் பதிவாளருக்கு உத்தரவிடக் கோரியும், நில உரிமையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், சொத்துகளின் உண்மையான உரிமையாளர்கள் தவிர, மூன்றாம் நபர்கள் எவரேனும் மோசடியாக சொத்துகளைத் தங்கள் பெயரில் பதிவு செய்யவில்லை என்பதை உறுதி செய்ய, உரிய நடைமுறைகளை பதிவுத்துறை ஏற்படுத்த வேண்டும் என வாதிடப்பட்டது.

பதிவுத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, விற்பனைப் பத்திரத்தை ரத்து செய்வது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தையே அணுக முடியும் எனவும், சொத்துகள் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்கள் பெயரில் பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில் முந்தைய வில்லங்கத்தைச் சரிபார்க்கும் வசதியை ஏற்படுத்த முடியுமா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பதிவாளர் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில், சொத்துகள் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்கள் பெயரில் பதிவு செய்வதைத் தடுப்பதற்கான வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 5-ம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்