எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடத்த படங்கள் வெற்றிப்பெற்றது போல் அதிமுக இரண்டு தலைவர்கள் கீழ் வெற்றி நடைப்போடுகிறது, ’’ என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்திற்கு ஏற்பட்ட எல்லா பாதிப்பும் திமுக ஆட்சியில் இருக்கும்போது நடந்தது. கச்சத்தீவு , ஸ்டெர்லைட் , முல்லைப் பெரியாறு , காவிரி உள்ளிட்ட பல பிரச்சனைக்கும் காரணம் திமுகதான்.
வீர வசனம் பேசிக்கொண்டு டெல்லி சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்றார். ஆனால் , தற்போது நீட் தேர்வுக்கு தயாராகச் சொல்கின்றனர்.
» போலி ரசீது மூலம் வரி ஏய்ப்பு செய்தால் குண்டர் சட்டம் பாயும்: வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தகவல்
» தலைமறைவாக உள்ள சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியை முன்ஜாமீன் கோரி மனு
மக்களிடம் பொய் சொல்லியே ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி திமுக மட்டும் தான்.
இன்று உரிமைக்கு குரல் கொடுப்போம் என்கிறார் ஸ்டாலின். ஆனால், அதிமுக மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து மத்திய அரசுடன் போராடி இருக்கிறது.
அடிமை அரசு என்று விமர்சித்த ஸ்டாலின் டெல்லி சென்று என்ன சாதித்துள்ளார்?
கோ பேக் மோடி என்று திமுக சொன்னாலும், அவரை மரியாதையுடன் நடத்தி இருக்கிறார் மோடி. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு அதிமுக ஆட்சியில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்த படங்கள் பெரிய வெற்றி. அதே போல இரண்டு தலைவர்கள் கீழ் அதிமுக வெற்றி நடை போடுகிறது.
எனவே அதிமுக கட்சிக்குள் பிளவு படுத்தும் வேலைகளை பலரும் (சசிகலா) செய்து கொண்டிருக்கின்றார்கள். அதிமுக ஆட்சியில் பல மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால், திமுக எத்தனை கடைகளை அடைத்துள்ளது?
உள்ளாட்சித் தேர்தல் வரைக்கும் தான் திமுக கூட்டணி நீடிக்கும். அதன் பிறகு மதிமுக , கம்யூனிஸ்ட் எல்லோரும் பிரிந்து சென்று விடுவார்கள்.
சட்டப்பேரவையில் ஸ்டாலின் போல சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வந்து நாடகம் போட மாட்டோம். உண்மையாகவே எங்களுடைய எதிர்ப்புகளை ஆக்கப்பூர்வமாக சபைக்கு உள்ளே விவாதம் செய்வோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago