அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மத அமைப்பு நிர்வாக தேர்தல்களில் போட்டியிடக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்ப உத்தரவு

By கி.மகாராஜன்

அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மத அமைப்பு நிர்வாகக்குழு தேர்தல்களில் போட்டியிடக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சகாயராஜ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

தூத்துக்குடி- நாசரேத் சிஎஸ்ஐ பேராயத்தின் கீழ் ஏராளமான பள்ளி, கல்லூரிகள் உள்ளன. இந்த அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு அரசு தான் சம்பளம் கொடுக்கிறது.

இவர்களில் பலர் சிஎஸ்ஐ, சிஎஸ்ஐ பேராய நிர்வாகக்குழு தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று நிர்வாகக்குழுவில் இடம் பெறுகின்றனர். அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மத அமைப்புகளின் நிர்வாகத்தில் இருப்பது சரியாக இருக்காது. இதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்து, அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மத அமைப்பிலான தேர்தல்களில் போட்டியிடக்கூடாது என பள்ளிக் கல்விதுறை சுற்றிக்கை அனுப்ப வேண்டும்.

தூத்துக்குடி- நாசரேத் சிஎஸ்ஐ பேராய நிர்வாகக்குழு தேர்தலில், அதன் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் போட்டியிட தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்