சின்னமனூர் மாணவரை பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

கரோனா பரவலால் 2019- 2020 கல்வி ஆண்டில் பெயர் விடுபட்டு போன சின்னமனூர் மாணவரை 2020- 21 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த சுரேஷ்குமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

என் மகன் ஸ்ரீதர். சின்னமனூரில் உள்ள தனியார் பள்ளியில் 2019-20ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு படித்தார். கரோனா ஊரடங்கால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு நடத்தாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். ஆனால் என் மகன் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவில்லை.

அடுத்த கல்வியாண்டில் என் மகன் பெயரை சேர்ப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. 2020- 2021 கல்வியாண்டிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு நடத்தாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இப்போதும் என் மகன் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. என் மகனை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:

ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களிடம் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. 2020-21ம் கல்வியாண்டு முழுமையாக நேரடி வகுப்புகள் இல்லாமல் ஆன்லைன் முறையிலேயே நடந்துள்ளது. இதனால் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்வு நடத்தாமலேயே தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. எனவே, மனுதாரர் மகனை 2020-21ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக 2 வாரத்திற்குள் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்