டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று பிரதமரை சந்தித்து கோரிக்கைகளை அளித்து பேசிய நிலையில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக பிரதமரை சந்திக்க செல்லவில்லை, தொற்று குறைந்த நிலையில் பிரதமரை சந்திக்க அனுமதி கிடைத்ததால் முதன்முறையாக மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை நேற்று சந்தித்தார்.
நேற்று காலை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், உதவியாளர் தினேஷ், தனிச் செயலர்கள் உதயச்சந்திரன், உமாநாத், செல்வராஜ் உள்ளிட்டோர் சென்றனர்.
டெல்லியில் முதல்வரை டி.ஆர்.பாலு, கனிமொழி, டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். டெல்லி தமிழக இல்லத்தில் அவரைத் தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்ட தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் கார்டு ஆஃப் ஹானர் எனப்படும் டெல்லி பட்டாலியன் போலீஸார் அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
நேற்று மாலை 5 மணி அளவில் பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். பிரதமருடன் 25 நிமிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழகம் சார்பில் 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்கிற அடிப்படையில் மத்திய அரசுடனான உறவு இருக்கும் என்று தெரிவித்தார். தாம் வைத்த கோரிக்கைகள் குறித்தும் விளக்கி கூறினார்.
டெல்லியில் தங்கியிருந்த அவரை மாலை 7 மணி அளவில் இடதுசாரிக்கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்டோர் சந்தித்தனர், சோனியாவை சந்திக்கும் திட்டம் அவரது பயணத்தில் இருந்தது. நேற்றிரவு டெல்லியில் தங்கிய முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10 மணி அளவில் சோனியாவின் இல்லத்துக்கு சென்றார். அவருடன் அவரது மனைவி துர்காவும் உடன் சென்றனர்.
அவர்கள் இருவரையும் சோனியாவும், ராகுலும் வரவேற்றனர். சோனியாவுக்கு புத்தகம் ஒன்றை ஸ்டாலின் பரிசளித்தார். சோனியா முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ராகுலும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். முதல்வராக பொறுப்பேற்றப்பின் முதன் முறையாக சோனியா மற்றும் ராகுலை ஸ்டாலின் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சோனியாவை சந்தித்தப்பின் தமிழ்நாடு இல்லம் திரும்பும் ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago