நெல்லையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில், பைக்குகள், கார், ஆட்டோ ஆகியோவை உடைக்கப்பட்டன.
நெல்லை மாநகரத்தை அடுத்த முன்னீர்பள்ளம் பகுதியில் நேற்று இரவு (ஜூன் 16) இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், மருதநகர் பகுதியை சார்ந்த பாலமுருகன் என்ற பால முகேஷுக்கு (17)அரிவாள் வெட்டு விழுந்தது. இதனையடுத்து, அவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் கார், ஆட்டோ, பைக், சில வீடுகள் கல்லெறிந்து சேதம் அடைந்துள்ளது. வைக்கோல் படப்புக்கும் தீ வைக்கப்பட்டதால் தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கப்பட்டது.
ஒரு தரப்பினர் மேலப்பாளையம் அம்பாசமுத்திரம் சாலையில் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மற்றொரு தரப்பினரும் மருதம் நகர் பகுதியில் மறியலில் ஈடுபட்டதால், ஏராளமான போலீஸார் முன்னீர்பள்ளம் பகுதியில் குவிக்கப்பட்டனர் .
நெல்லை மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன், மாநகர காவல் துணை ஆணையாளர்கள் ராஜராஜன், சுரேஷ்குமார் தலைமையில், போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, முன்னீர்பள்ளம் அருகே கோபாலசமுத்திரத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாமுக்கு ஆறு பேர், மூன்று இரண்டு சக்கர வாகனத்தில் சென்று உள்ளனர். அங்கிருந்த பெருமாள் (70) மற்றும் சின்னத்துரை (25) என்ற இலங்கை அகதிகளையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.
இடதுகை மணிக்கட்டில் துண்டிக்கப்பட்டவர், பலத்த வெட்டுக்காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து இலங்கை தமிழர் இலங்கை முகாமை சேர்ந்தவர்கள் அம்பை மெயின்ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago