வேதாரண்யம் பகுதியில் விளைச்சல் அதிகமாக உள்ள நிலையில் விற்பனையாகாத மாம்பழங்கள் விரக்தியில் விவசாயிகள்: அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

By தாயு.செந்தில்குமார்

வேதாரண்யம் பகுதியில் மாம்பழ விளைச்சல் அதிகளவில் உள்ள நிலையில் ஊரடங்கால் வெளியூர் வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராததால் மாம்பழ விற்பனையில் தேக்கம் ஏற்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் கத்தரிப்புலம், செட்டிபுலம், புஷ்பவனம், நாலுவேதபதி, செம் போடை, தேத்தாகுடி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி நடைபெற்று வருகி றது. சீசன் சமயங்களில் மொத்த வியாபாரிகள் மூலமாக தமிழகத் தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்படும்.

இப்பகுதியில் ருமேனியா, செந்தூரா, பங்கனப்பள்ளி, ஒட்டு நீலம் ஆகிய ரகங்கள் அதிக அளவில் விளைகின்றன. வழக்கம்போல, இந்த ஆண்டும் அனைத்து ரக மாம்பழங்களும் அதிக அளவு விளைச்சலை தந்துள்ளன.

ஆனால், கடந்த ஒரு மாதமாக கரோனா ஊரடங்கு காரணமாக, மாம்பழங்களை கொள்முதல் செய்ய வெளியூர் வியாபாரிகள் வராததால், அவை அறுவடை செய்யப்படாமல் மரத்திலேயே பழுத்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு சில வியாபாரிகள் மட்டும், நாட்டு ரக மாங்காய் கிலோ ரூ.6, ஒட்டு மாங்காய் ரூ.10, பங்கனப்பள்ளி, ருமேனியா, செந்தூரா உள்ளிட்ட மாம்பழ ரகங்களை ரூ.15-க்கு கொள்முதல் செய்கின்றனர்.

தற்போது வேதாரண்யம் பகுதியில் 500 டன் ருமேனியா மாம்பழம் விற்பனையாகாமல் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மா விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். எனவே, மாம்பழங்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு வேளாண்மை துறை தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என்றும், அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தேத்தாக்குடியை சேர்ந்த விவசாயி அழகேசன் கூறும்போது, ‘‘நான் 5 ஏக்கரில் மாங்காய் சாகுபடி செய்துள்ளேன். கரோனா காரணமாக வெளியூர் வியாபாரிகள் கொள்முதல் செய்ய வருவதில்லை. இதனால் மாம்பழங்கள் அறுவடை செய்யப்படாமலேயே உள்ளன. இன்னும் இரண்டொரு நாட்கள் பறிக்காமல் விட்டால், அவை மரத்திலேயே பழுத்து அழுகும் நிலை ஏற்படும். எனவே அரசே மாம்பழங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுதொடர்பாக நாகை மாவட்ட தோட்டக்கலைத் துறை அலுவ லர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் கூறியது: கரோனா பரவல் காரணமாக விவசாயிகளுக்கு காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்வதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, அவற்றை விற்பனை செய்வதற்காக 400 நடமாடும் வாகனங்களுக்கு அனு மதி தந்திருக்கிறோம். எனவே மாங் காய், மாம்பழங்களை விற்பனை செய்வதில் சிரமம் இருக்க வாய்ப்பில்லை என்றனர்.

வேளாண் வணிகத்துறை அலு வலர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘மாங்காய், மாம் பழங்களை விற்பனை செய்வதில் விவசாயிகளுக்கு சிரமம் இருந் தால், வேதாரண்யம் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம். வெளி மாவட்டம், வெளி மாநிலம் எதுவாக இருந்தாலும் மாம்பழங் களை அனுப்ப அவர்கள் உதவி செய்வார்கள். தற்போதுள்ள சூழ் நிலையில், விவசாயிகள் எதிர்பார்க் கும் விலை கிடைக்காததுதான் பிரச்சினை. விவசாயிகளும் கால சூழ்நிலையை கருத்தில் கொண் டால், மாங்காய், மாம்பழங்கள் தேங்க வாய்ப்பே இல்லை என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்