மாவட்ட ஆட்சியர்கள், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் உள்ளிட்ட 30 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் 

By செய்திப்பிரிவு

மாவட்ட ஆட்சியர்கள், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர், ஆசிரியர் தேர்வாணையத் தலைவர், சுற்றுலாத்துறை இயக்குநர் உட்படப் பல பொறுப்புகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்ட உத்தரவும், மாற்றப்பட்ட அதிகாரிகளும், அவர்கள் முன்பு வகித்த பதவியும்:

1. நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராகப் பதவி வகிக்கும் பிரவீன் நாயர் இடமாற்றம் செய்யப்பட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டாளராகப் பதவி வகித்துவரும் சுதன் இடமாற்றம் செய்யப்பட்டு, சமக்ரா சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பதவி வகித்துவரும் அண்ணாதுரை இடமாற்றம் செய்யப்பட்டு, வேளாண்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இடமாற்றம் செய்யப்பட்டு, கூட்டுறவு சொசைட்டியின் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் மாற்றப்பட்டு, பத்திரப் பதிவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் மாற்றப்பட்டு, நில நிர்வாகத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மாற்றப்பட்டு, நகராட்சி நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

8. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகப் பதவி வகிக்கும் சந்தீப் நந்தூரி மாற்றப்பட்டு, சுற்றுலாத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும் செயல்படுவார்.

9. வணிகவரித் துறை (நிர்வாகம்) கூடுதல் ஆணையராகப் பதவி வகித்த லட்சுமி பிரியா இடமாற்றம் செய்யப்பட்டு தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. நில அளவைத் துறை ஆணையர் பதவி வகித்து வரும் செல்வராஜ் இடமாற்றம் செய்யப்பட்டு, டவுன் பஞ்சாயத்து ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

11. சமக்ரா சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநராகப் பதவி வகித்து வரும் லதா இடமாற்றம் செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வாணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

12. சேலம், தமிழ்நாடு கனிமவளத் துறை மேலாண் இயக்குநர் பிருந்தாதேவி இடமாற்றம் செய்யப்பட்டு, தோட்டக்கலை மற்றும் தோட்டப் பயிர் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

13. தொழிலாளர் துறை ஆணையர் வள்ளலார் இடமாற்றம் செய்யப்பட்டு, வேளாண்துறை சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

14. முதல்வர் தனிப்பிரிவு சிறப்பு அலுவலர் சரவணவேல்ராஜ் மாற்றப்பட்டு, நகர் & ஊரமைப்பு இயக்கக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

15. சேலம் பட்டு வளர்ப்புத் துறை இயக்குநர் டி.ஜி.வினய் இடமாற்றம் செய்யப்பட்டு, நில அளவை மற்றும் செட்டில்மென்ட் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

16. மீன்வளத்துறை மேலாண் இயக்குநர் மற்றும் ஆணையர் ஜெயகாந்தன் இடமாற்றம் செய்யப்பட்டு, அமலாக்கம் மற்றும் கலால் பிரிவு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

17. அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா இடமாற்றம் செய்யப்பட்டு, சமூக நலத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

18. தமிழ்நாடு உப்புக் கழக மேலாண் இயக்குநர் அமுதவல்லி இடமாற்றம் செய்யப்பட்டு, ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாடு திட்ட இலக்கு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

19. மின் ஆளுமை கோரிக்கை நிவாரண சிறப்பு அலுவலர் கந்தசாமி இடமாற்றம் செய்யப்பட்டு, பால் பொருள் தயாரிப்பு மற்றும் பால் வளர்ச்சித் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்க மேலாண் இயக்குநராகவும் செயல்படுவார்.

20. செய்தி ஒளிபரப்புத் துறை இயக்குநராகச் செயல்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டு இருந்த பாஸ்கர பாண்டியன், தற்போது மாநில வளர்ச்சிக் கொள்கை உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

21. விடுப்பில் சென்று வந்து மீண்டும் பணியில் இணைந்துள்ள அன்சுல் மிஸ்ரா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

22. நில நிர்வாகத்துறை கூடுதல் ஆணையர் மரியம் பல்லவி பல்தேவ் இடமாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

23. வேளாண் துறை இயக்குநர் தக்‌ஷிணாமூர்த்தி இடமாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

24. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் மாற்றப்பட்டு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

25. மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலர் பதவி வகித்த விஜய ராஜ்குமார், சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் வாரிய மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

26. தேர்தல் ஆணைய இணை தலைமைத் தேர்தல் அதிகாரி பதவி வகித்த அஜய் யாதவ், எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

27. தேர்தல் ஆணையத் துணைத் தேர்தல் தலைமை அதிகாரியாகப் பதவி வகித்த ஆனந்த் இடமாற்றம் செய்யப்பட்டு, தொழிற்சாலைகள் வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

28. உள்துறை & கலால் வரித் துறை இணைச் செயலர் பதவி வகித்த மணிகண்டன் மாற்றப்பட்டு தமிழ்நாடு பாடநூல் நிறுவன கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

29. மதுரை திட்ட அலுவலர் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா இடமாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

30. சிஎம்டிஏ உறுப்பினர் செயலராகப் பதவி வகித்த சுன்சோங்கம் ஜடக் சிரு இடமாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்