கரோனா தொற்று பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பியதும் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து இயல்பு நிலை திரும்பியதும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்,’ என்ற நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் சிவகங்கை தனியார் மகாலில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, எம்எல்ஏக்கள் தமிழரசி, மாங்குடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 61 பேருக்கு முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூகநலத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் 41 திருநங்கைகளுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.2 ஆயிரத்தை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

நிகழ்ச்சி முடிந்ததும், திருநங்கை களில் விடுபட்டவர்களுக்கு வீடு கட்டித் தர வேண்டுமென அமைச் சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 6,214 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதன் மீது படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. இதற்காக ஆணையர் நியமிக்கப்பட் டுள்ளார். அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன. மாநிலத்தில் கரோனா தொற்று குறைந்து இயல்புநிலை திரும் பியதும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். டாஸ்மாக் கடை திறப்பு குறித்த கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்காமல் புறப்பட்டு சென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்