தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தின், பாலக் காடு மாவட்டத்தில் மாவோ யிஸ்ட் இயக்கங்கள் செயல்பாடு அதிகமாக உள்ளது. சைலண்ட் வேலியின் அருகே உள்ள அட்டப் பாடி, மன்னார்காடு, அகளி ஆகிய வனப் பகுதிகளில் கேரள போலீஸாருக்கும், மாவோயிஸ்ட் களுக்கும் அடிக்கடி துப்பாக்கிச் சண்டை நடைபெறுகிறது.
சைலண்ட்வேலி வனத்தில் கடந்த அக்டோபர் மாதம் துப் பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்டவர்களின் புகைப் படங்களை வெளியிட்டு கேரள போலீஸார் விசாரித்து வரு கின்றனர். இந்நிலையில் கடந்த 29-ம் தேதி, மன்னார்க்காடு அருகே அம்பலப்பாறா என்ற இடத்தில் கேரள தண்டர்போல்ட் போலீ ஸாருக்கும், மாவோயிஸ்ட்க ளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடை பெற்றது.
இதில் மாவோயிஸ்ட் தரப்பில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியா கியது. சம்பவம் நடந்த இடத்தில் மாவோயிஸ்ட்கள் பயன்படுத்திய வாக்கிடாக்கி, 3 தோட்டக்கள், ஒரு டார்ச் விளக்கு உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவம் நடந்த இடம், தமிழக எல்லையிலிருந்து 20 கி.மீ தொலைவுக்குள் இருப்ப தால், தமிழக - கேரள எல்லை யான ஆனைகட்டி, மாங்கரை, பில்லூர் அணை, காருண்யா நகர், பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இடங்களில் உள்ள சோத னைச் சாவடிகளில் பாதுகாப்பு, கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டுள்ளன. கேரளத்திலிருந்து வரும் வாகனங்கள், பேருந்துகள் அனைத்தும் தீவிர சோதனைக்குப் பிறகே தமிழகத்துக்குள் அனு மதிக்கப்படுகின்றன. காய மடைந்த மாவோயிஸ்ட்கள் சிகிச் சைக்காக கோவை வரலாம் என்பதால் மருத்துவமனை களிலும் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
என்எஸ்டி பாதுகாப்பு
இதனிடையே, எல்லையோரப் பகுதியில் நிலவும் பதட்டமான சூழல் காரணமாக, உதவி ஆய்வாளர் மாடசாமி என்பவர் தலைமையில் நக்சல் தடுப்புப் பிரிவு (என்எஸ்டி) போலீஸார் பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், எல்லையோர காவல் நிலை யங்களிலும், சோதனைச் சாவடி களிலும் போதுமான போலீஸார் தேவைப்படுவதால், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கோவைக்கு கூடுதலாக போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் 4-வது பட்டாலியனைச் சேர்ந்த சிறப்பு காவல்படையினரும் வர வழைக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யாபாரதி கூறும்போது, ‘மாவோயிஸ்ட் ஊடு ருவல் தடுப்பு மற்றும் பாது காப்பு வசதிக்காக திருப்பூர் மாவட் டத்திலிருந்து 40 போலீஸார் கோவை வந்துள்ளனர். இதேபோல தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் (பட்டாலியன் 4) இருந்து 40 போலீஸார் கோவை வந்துள்ளனர். அவர்கள் எல்லையோர முகாம் களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்’ என்றார்.
பாதுகாப்புப் பணியில் உள்ள போலீஸார் கூறும்போது, ‘கொடுங்கரைப் பள்ளம் என்ற நீர்வழிப்பாதைதான் தமிழக - கேரள எல்லையாக இருக்கிறது. எனவே அதையொட்டியுள்ள மலைக் கிராமங்களில் தொடர்ந்து கண் காணிப்பு நடக்கிறது. கேரளத்தின் வடக்குப் பகுதியில் அதிக ஆதிக் கம் கொண்டிருக்கும் ‘பீப்பிள் லிபரேசன் கொரில்லா ஆர்மி (பிஎல்ஜிஏ)’ என்ற தடை செய்யப் பட்ட இயக்கத்தின் ஊடுருவல் இருக்கலாம் என தகவல் கிடைத் துள்ளது.
மேலும் அந்த அமைப்பு கடந்த 2000-ல் டிச.2-ம் தேதி தொடங்கப்பட்டது. அதன் ஆண்டு விழா (டிச.2) இன்று நடைபெறு கிறது. இதையொட்டி, மலைக் கிராம மக்களிடம் அவர்கள் பிரச்சாரம் நடத்தவும், தாக்குதல்களில் ஈடுபடவும் வாய்ப்புள்ளதாக கேரள உளவுத்துறை எச்சரித்துள்ளது. எனவே எல்லையோர தமிழகப் பகுதிகளிலும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்து போலீஸார் வரவழைக்கப்பட உள்ளனர்’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago