திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு வாரத்திற்குப் பிறகு தடுப்பூசி போடுவதால் மையங்களில் அதிகளவில் மக்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் கூட்டம் கூட்டமாக முண்டியடித்து வருவதால் சமாளிக்க முடியாமல் செவிலியர்கள் திணறினர்.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அந்தவகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஒரு வாரமாக தடுப்புசி மையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. மையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால் தடுப்பூசி செலுத்த ஆர்வமாக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்நிலையில் மாவட்டத்திற்கு நேற்றிரவு 7800 கோவிஷீல்டு மற்றும் 1000 கோவாக்சின் என மொத்தம் 8800 கொரனோ தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த 8800 தடுப்பூசிகளும் மாவட்ட சுகாதார சுகாதார துணை இயக்குனர் வரதராஜன் மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் உள்ள 84 தடுப்பூசி மையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.
ஒரு வாரத்திற்குப் பிறகு தடுப்பூசி போடப்படும் தகவலை அறிந்து திருநெல்வேலி மாநகர் பகுதியில் உள்ள தடுப்பூசி மையங்களில் காலை முதல் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்த வண்ணம் உள்ளனர்.
» கெஞ்சிக் கேட்கிறேன்; வெளியில் நடமாடுவதை குறைத்துக்கொள்ளுங்கள்: முதல்வர் ஸ்டாலின்
» மேட்டூர் அணையை பாசனத்துக்காக திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக திண்டதால் கூட்டத்தினரை சமாளிக்க முடியாமல் செவிலியர்கள் திணறினர்.
இதற்கிடையில் மிகக் குறைவான அளவே தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு மையத்திற்கும் தலா 100 தடுப்பூசிகள் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
அதேசமயம் நூற்றுக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட வந்துள்ளதால் இன்றும் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 1,54,500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago