சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 840 பேர் இறந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் கரோனா முதல் அலையைவிட, இரண்டாவது அலையிலேயே அதிக எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பும் அதிகமாக உள்ளதுகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இறந்தநிலையில், அவரது இறப்பு கரோனா தொற்றால் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் நிமோனியா, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல காரணங்களால் இறந்ததாக சான்று வழங்கப்படுகிறது.
கரோனாவால் இறந்ததற்கான சான்று இருந்தால் மட்டுமே அரசு அறிவித்துள்ள சலுகைகளைப் பெறமுடியும். இதனால் பலர் மருத்துவர்களுடன் கரோனா தொற்றால் இறந்ததற்கான சான்று கேட்டு பிரச்சினை செய்துவருகின்றனர். இருந்தாலும் அவர்களுக்கு கரோனா தொற்றால் இறந்ததற்கான சான்று கொடுப்பதில்லை.
இந்நிலையில் கடந்த மே மாதத்தில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 840 பேர் இறந்துள்ளனர். இதில் மாவட்ட அளவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்றால் 24 பேர் மட்டுமே இறந்துள்ளதாக அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் 10-க்கும் குறைவானவர்களே தற்கொலை போன்ற இதர காரணங்களால் இறந்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, அரசு விதிமுறைப்படிதான் இறப்பு அறிவிக்கப்படுகிறது என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago