சென்னையில் மழையால் தொற்று நோய் பரவும் அபாயம்: தமிழகம் முழுவதும் இருந்து மருத்துவக் குழுக்கள் விரைவு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் பொது மக்கள், குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு தற்காலிக மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்து மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுவினர் நேற்று அனுப்பப்பட்டுள்ளனர்.

சென்னை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைநீருடன் கழிவுநீர் தேங்கியதால் பொதுமக்கள், குழந்தைகளுக்கு தொற்று நோய் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளையும் மழைநீர் சூழ்ந்ததால் புறநகர் மக்கள் மருத் துவ சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார மருத்துவ நலப்பணிகள், சுகாதாரத் துறை மருத்துவர்கள், செவிலியர் மற்றும் மருத்துவப் பணியாளர்களைக் கொண்டு தொற்று நோய் பரவுவதை முழுமையாக தடுக்கவும், பாதிக்கப்பட்ட மக் களுக்கு சிகிச்சை அளிக்கவும் முடிய வில்லை. அதனால், தமிழகம் முழு வதும் ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் சுகாதாரத் துறை மருத் துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை சென் னைக்கு நேற்று முன்தினம் இரவே அவசரமாக அனுப்பி வைக்குமாறு மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர்களுக்கு உத்தரவு வந்தது. இதையடுத்து, சுகாதாரத் துறை துணை இயக்குநர்கள், ஒவ்வொரு வட்டாரத்திலும் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்கள், துணை சுகாதாரநிலையங்களில் பணி புரியும் மருத்துவர்கள், செவிலியர் களை, வாகன ஓட்டுநர்களை அழைத்து நாளை காலை (நேற்று காலை) உடனடியாக சென்னைக்கு புறப்பட்டு செல்லத் தயாராக இருங்கள் என்று உத்தரவிட்டனர். அதன்படி, நேற்று காலை அவர்கள் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு தனி வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர். மதுரை மாவட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 18 மருத்துவர்கள், 18 செவிலியர்கள், 15 வாகனங்களுடன் ஓட்டுநர்கள் அடங்கிய 13 குழு வினர் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகளுடன் சென்னை புறப்பட்டு சென்றுள்ளனர். இதேபோல் சேலத்திலிருந்தும் சேலம் சுகாதார துறை துணை இயக்குநர் ஜெகதீஷ் குமார் தலைமையில் 10 மருத்துவர்கள் கொண்ட குழுவினர், மருந்து பொருட்களுடன் நேற்று காலை சேலத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்