தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் வரும் 15-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்துவருகிறது. இன்றைய (ஜூன் 11) நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 15,759 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில், 1,094 பேருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, வரும் 14-ம் தேதியுடன் அமலில் உள்ள ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில், தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் வரும் 14-ம் தேதி முதல் ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை உத்தரவிட்டுள்ளார்.
எனினும், நோய்த்தொற்று அதிகம் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
» ஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்: பிரதமருடன் நேரில் சந்திப்பு
» தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கான கூடுதல் தளர்வுகள் என்னென்ன?
மீதமுள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் அழகு நிலையங்கள், சலூன்கள் திறப்பு, பூங்காக்கள் திறப்பு உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், 27 மாவட்டங்களில் வரும் 15-ம் தேதி முதல், டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago